ஹிஸ்னுல் முஸ்லிம் 59

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 59

16- دعاء الاستفتاح 

(தொழுகையில்)தக்பீர் காட்டியவுடன் ஓதும் துஆக்கள்

தக்பீருக்கு பின்னர் ஓதும் துஆக்களை 3 வகையாக பிரிக்கலாம் 

  1. அல்லாஹ்வை புகழ்வது, கண்ணியப்படுத்துவது,மகத்துவத்தை பறைசாற்றுவது …..போன்றவை
  2. நாம் அல்லாஹ்விற்கு அடிமை என்று நம்முடைய அடிமைத்தன்மையை வெளிப்படுத்துவது. 
  3. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தல்.

《☆》 அல்லாஹ்வை புகழ்வதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான். 

ஸூரத்துத் தூர் 52:48

وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ 

….மேலும் நீங்கள் எழுந்திருக்கும்(தொழுகையில்) சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,

《☆》 பிற ஆரம்ப துஆக்களை விட தரத்தில் குறைந்தததாக இருப்பினும் இந்த துஆ அல்லாஹ்வை புகழும் வண்ணம் இருப்பதால் மேற்கூறப்பட்ட வசனத்திற்கு ஏற்ப 

سبحانك اللهم وبحمد ك وتبارك اسمك وتعالى جدك، ولا أ له غيرك”

எனும் துஆ உலமக்களிடையே பிரபல்யமானதாக இருக்கிறது.