حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 66
عن ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال إذا ركع أحدكم فقال في ركوعه سبحان ربي العظيم ثلاث مرات فقد تم ركوعه وذلك أدناه وإذا سجد فقال في سجوده سبحان ربي الأعلى ثلاث مرات فقد تم سجوده وذلك أدناه قال وفي الباب عن حذيفة وعقبة بن عامر قال أبو عيسى حديث ابن مسعود ليس إسناده بمتصل عون بن عبد الله بن عتبة لم يلق ابن مسعود والعمل على هذا عند أهل العلم يستحبون أن لا ينقص الرجل في الركوع والسجود من ثلاث تسبيحات وروي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات وهكذا قال إسحق بن إبراهيم
இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) உங்களிலொருவர் ருகூஹில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் என 3 முறை சொன்னால் அவருடைய ருகூஹ் பூரணமாகி விட்டது. அது தான் ஆகக்குறைந்ததாகும், ஸுஜூது செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று 3 முறை சொன்னால் அவரது ஸுஜூது பூர்த்தியாகிறது அதுவே ஆகக்குறைந்ததாகும்
திர்மிதி 261
《☆》 இந்த பாடத்தில் ஹுதைபா (ரலி) மற்றும் உக்பத் இப்னு அமீர் (ரலி) அவர்கள் வழியாகவும் சில செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்னு மசூத் (ரலி) வின் இந்த அறிவிப்பாளர் தொடர் சரியான தொடரில் இல்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் அவ்ன் இப்னு அப்துல்லாஹ் என்பவர் இப்னு மசூத் (ரலி) வை சந்திக்கவில்லை. ஆயினும் அஹ்லுல் இல்ம் இந்த நடைமுறையை விரும்புகிறார்கள். இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) இமாம் 5 தஸ்பீஹ் சொல்வது சிறந்தது என்று கூறியதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதலால் பின்னால் உள்ளவர்களுக்கு 3 தஸ்பீஹ் சொல்லும் நேரம் கிடைக்கும். ஆகவே இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அவர்களும் கூறுகிறார்கள்.
《☆》 இந்த செய்தியை இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இது உறுதியான செய்தியாக இருந்தால் …….. என பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் அபூதாவூத் – இது தொடர்பு அறுந்த செய்தி. அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) யை சந்திக்கவில்லை.
குறிப்பு:
அறிஞர்களில் சிலர் முர்சல் ஐ முன்கதிஹ் என்றும் அறிவித்துள்ளார்கள்.
《☆》 ஷேக் அல்பானி (ரஹ்) இதை லயீஃப் என்று அறிவித்துள்ளார்கள்.
《☆》 இந்த அறிவிப்பில் மூஸா இப்னு அய்யூப் என்பவர் அறியப்படாதவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
كان رسولُ الله – صلَّى الله عليه وسلَّم – إذا ركَع قال: ((سبحان ربي العظيم وبَحَمْده – ثلاثًا))، وإذا سجَد قال: ((سبحان ربي الأعلى وبحمْده – ثلاثًا))
நபி (ஸல்) ருக்கூஹில் سبحان ربي العظيم وبَحَمْده
3முறையும்
சுஜூதில் سبحان ربي الأعلى وبحمْده
3முறையும் கூறினார்கள்.
ஸுனன் அபூதாவூத் 870
وقال: وهذه الزِّيادة نخاف ألاَّ تكون محفوظة
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் – இது ஜியாதா வாகும். இது பாதுகாக்கப்பட்ட செய்தி அல்ல என்று நான் பயப்படுகிறேன்.
மேற்கூறப்பட்ட இந்த 2 ஹதீஸுகளையும் மிஸ்ர் வாசிகள் தான் அறிவித்திருக்கிறார்கள்.
இமாம் இப்னுல் மூலக்கின் தனது பதருல் முலீன் என்ற நூலில் பாகம் 3 பக்கம் 68 இல்
- மூஸா இப்னு அய்யூப் அவர்களது பெரிய தந்தை தான் உக்பத் இப்னு ஆமீர் என நிரூபிக்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் அது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
- ஹுதைபாஹ் (ரலி) வழியாக 2 அறிவிப்பாளர் வரிசையில் வபிஹம்திஹி என்று இடம்பெற்றுள்ளது. அந்த 2 அறிவிப்பாளர் வரிசையும் பலஹீனமானது என பதிவு செய்துள்ளார்கள்.
- அப்துல்லாஹ் இப்னு மசூத் வரும் செய்தியில் சரீஹ் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கைவிட்டுவிட்டார்கள்.
- அபூ மாலிக் அல் அஷ்அரீ என்பவர் வழியாக வரும் அறிவிப்பில் ஷஹர் இப்னு ஹவ்ஷப் என்பவர் இடம்பெறுகிறார் அவரை அறிஞர்கள் கை விட்டு விட்டார்கள்.
- அபூஜுஹைபா எனும் ஸஹாபி வழியாக வரும் செய்தியில் அம்ர் என்பவர் இடம்பெறுகிறார். அவர் ஷியா வை சேர்ந்தவர் போன்று உள்ளது என அதை பலவீனப்படுத்தினார்கள்.
- சஹதீ என்பவர் தனது தந்தை வழியாக, தந்தை அவரது பெரிய தந்தை வழியாக அறிவிக்கக்கூடிய செய்தி அதையும் பலஹீனப்படுத்தினார்கள்.
《☆》 இந்த அனைத்து செய்திகளையும் தொகுத்து பார்த்தாலும் சுஜூதிலும் ருக்கூஹிலும் வபிஹம்திஹி என்ற வார்த்தை இடம் பெறுவது பலஹீனமாகவே இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)