அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 16

الإيمان بأسمائه تعالى وصفاته

அல்லாஹ்வுடைய பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்று நம்புதல் :

 உலகத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் தான்

நூஹ் (அலை) யின் சமூகத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் இறந்த போது அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களது கப்ருகளை கட்டி நேசத்தை காட்டி காலப்போக்கில் அவர்களையே வணங்க ஆரம்பித்து ஷிர்க் செய்தார்கள்.

 நபி (ஸல்) வின் உம்மத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் விஷயத்தில் தான்

إن الشيطان قد يئس أن يعبد بأرضكم هذه، ولكن قد رضي بما تحقرون من

أعمالكم

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நிச்சயமாக ஷைத்தான் இந்த (அரபு)பூமியில் அவனை வணங்கப்படுவதில் நம்பிக்கையிழந்துவிட்டான் ஆனால் நீங்கள் சிறிதாக நினைக்கும் பாவங்கள் மூலம் உங்கள் அமல்களை அழிப்பான்.(முஸ்லீம்)