அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 23

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 23

(3)அல்லாஹ் தனது பண்பை மட்டும் சொல்லியிருந்தால் அதில் அவனுடைய பெயர் அடங்காது

உதாரணம் – 1

❤ சூரா அஷ்ஷூரா 42:49 , 50

يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ 

49) தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏

50) அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும்(குழந்தை பெறாதவர்களாகவும்) செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

  • இந்த வசனத்தை வைத்து அல்லாஹ்விற்கு வாஹிப் என்ற பெயரை நாமாக சூட்டக் கூடாது மாறாக அல்லாஹ் தனக்குத் தானே குரானிலோ ஹதீஸிலோ சூட்டியிருந்தால் மட்டுமே அந்த பெயரை நாம் உபயோகிக்க வேண்டும். ஹதீஸுகளில் நாம் பார்க்கும்போது வஹ்ஹாப் என்ற பெயர் தான் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.

உதாரணம் – 2

اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏

நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்

  • இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விற்கு முரீத் என்ற பெயரை நாமாகவே சூட்டி விடக்கூடாது. ஏனெனில் இங்கு தனது பண்பை தான் அல்லாஹ் கூறினான் பெயரை கூறவில்லை.