அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 24

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 24

4 – அல்லாஹ்வுடைய பண்புகளை பொதுவாக 2 ஆக பிரிக்கலாம்

சில உதாரணங்கள்:-

அர்ஷில் இருக்கிறான்

فقال لها الرسول : أين الله ؟ فقالت : في السماء، قال من أنا؟ قالت: أنت رسول

الله، قال: أعتقها فإنها مؤمنة) رواه مسلم

நபி (ஸல்) – ஒரு பெண்மணியிடம் اين الله؟ -அல்லாஹ் எங்கே இருக்கிறான்?-(في السماء)

அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என அந்த பெண்மணி பதிலளித்தார்கள்-

(أعتقها فإنها مؤمنة) அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அவள் முஹ்மினான பெண் (முஸ்லீம்)

அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்ற செய்தி குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியில் இருக்கிறான் என்பதை குறிக்க استوى என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சொல்லை நேரான வழியில் உள்ள அறிஞ்சர்களும் 2 விதமாக விளக்குகிறார்கள்.

الاستواء على العرش – جالس على عرشه-

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களின் மகன் அபூஅப்துல்லாஹ் அவர்களின் புத்தகத்தில் – அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கிறான் என்பதற்கு அர்ஷின் மேல் அமர்ந்திருக்கிறான் என்று விளக்கம் தந்துள்ளார்கள். ஏனெனில் الاستواء என்ற சொல்லுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது. குர்ஆனில் அல்லாஹ் இந்த சொல்லுக்கு அமர்ந்தான் என்ற அர்த்தத்தை உபயோகித்திருக்கிறான்.

❤ அல் முஃமினூன் : 23:28

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ

الظّٰلِمِيْنَ‏

   “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!

❤ சூரா அல் ஜுக்ருஃப் 43:13

لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِىْ

سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ‏

   அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.  

  • அல்லாஹ் அர்ஷின் மீது ஆகிவிட்டான் என்றால்  மனிதர்கள் இருப்பது போல அல்ல என்பதை  புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கம்:

அல்லாஹ்வுடைய பண்பை பொறுத்தவரை 2 ஆக பிரிக்கிறோம்

صفات ذاتية  – அல்லாஹ்வுடைய இருப்போடு சம்மந்தப்பட்ட பண்புகள்.

உதாரணம்:

  • அல்லாஹ் அறிவுள்ளவன் இது இருப்போடு சம்மந்தப்பட்டது.
  • அல்லாஹ்வுடைய சக்தி அவனுடைய இப்போது சம்மந்தப்பட்டது அல்லாஹ் ஆட்சியதிகாரம் உள்ளவன், அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன்,  
  • அல்லாஹ்விற்கு கை இருக்கிறது என்று ஹதீஸில் வந்தால் அதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் நாமாகவே  அவனுக்கு உடல் இருக்கிறது என்று கூறிவிடக்கூடாது.

صفات فعلية – அல்லாஹ்வுடைய செயலோடு சம்மந்தப்பட்ட பண்புகள்.

இறைவன் வருகிறான், மழையை இறங்குகிறான்.

உதாரணம்

❤ சூரா அல் ஃபஜ்ர் 89:22

وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

   இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

  • (இறைவனுடைய பேச்சை இரு கோணத்தில் நோக்க வேண்டும் அவன் பேசும் இயல்புடையன் ஆற்றலுடையவன் என்று கூறும்போது அது அவனுடைய இருப்போடு சம்மந்தப்படுகிறது ஆனால் வேதம் (குரான்) அவன் நாடினால் செய்யக்கூடிய செயல்களோடு சம்மந்தப்பட்டது. ஆகவே அவனுடைய பேச்சு என்பது இந்த இரண்டோடும் சம்மந்தப்பட்டதாகும்)

● ஆகவே அல்லாஹ் அர்ஷின் மீது ஆகிவிட்டான் என்பது அவனது செயலோடு (فعلية) அடங்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.