அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 35
💠 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும்.
நபி (ஸல் )கவலையின் போது:
💠 اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ
فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ
عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ
قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي
யா அல்லாஹ் உனது அனைத்து பெயர்களைக் கொண்டும் நான் துஆ கேட்கிறேன், நீ உனக்கு சூட்டிய பெயர்களாக இருந்தாலும் சரி உனது வேதத்தில் நீ கூறிய பெயர்களாக இருந்தாலும் சரி உனது நபிமார்கள் மூலம் அறிவித்த பெயர்களாக இருந்தாலும் சரியே. நீ யாருக்கும் அறிவிக்காமல் நீ வைத்திருக்கும் பெயர்களாக இருந்தாலும் சரியே அனைத்துப் பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் துஆ கேட்கிறேன். குர்ஆனை என் உள்ளத்தின் பசுமையான பகுதியாக்குவாயாக! என் இதயத்தின் ஒளியாக ஆக்குவாயாக! என் கவலையை போக்குவதாக ஆக்குவாயாக!அனைத்து கவலைகளையும் போக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்று ஓதுவார்கள்.
💠 ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு அல்லாஹ்வின் பண்புகளையும் பெயர்களையும் உபயோகித்து துஆ செய்வது சிறந்ததாகும்.
கருத்துரைகள் (Comments)