அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 37
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை
ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
🌷 அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும்.
ஸூரத்துல் வாகிஆ 56:60
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
🌷 அபூபக்கர் (ரலி )யை நோக்கி ஒருவர் நீங்கள் அல்லாஹ்வுடைய கலீஃபா என்று கூறியபோது அதை அபூபக்கர் (ரலி )தடுத்தார்கள் மேலும் நான் அல்லாஹ்வின் தூதரின் கலீஃபா ஆவேன் என்றார்கள் .
ஸூரத்துல் பகரா 2:30
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا
وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு வழித்தோன்றலை(பரம்பரையை பெருக்கக்கூடிய சந்ததிகளை) அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அதற்கு இறைவன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
🌷 நபி (ஸல்) இரவில் வித்ர் தொழுகையில் தக்பீர் கட்டிய பிறகு கேட்கக்கூடிய துஆ
اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب
والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلفوا فيه من
الحق فإنك أنت تهدي من تشاء إلى صراط مستقيم
ஜிப்ரயீலுடைய மீக்காயீலுடைய இஸ்ராஃபீலுடைய இறைவனே என்று துஆ செய்கிறார்கள்.
கருத்துரைகள் (Comments)