அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 45
மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள்
💠 நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் நேரத்தை தவிர. மலக்கு வந்து என் தோழர்களுக்காக பிரார்த்திக்க சொன்னார்கள்.
💠 இந்த செய்தியில் மலக்குமார்கள் புனிதமான இடத்திற்கு வருவார்கள் என நபி (ஸல்) கூறுகிறார்கள்
💠 ஜும்மாவுடைய தினங்களில் மலக்குமார்கள் பள்ளிவாயில்களில் முதலாவதாக வரும் நபர்களை கணக்கெடுப்பார்கள்.
💠 மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள் .
கருத்துரைகள் (Comments)