அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 46
நாம் படித்தவை
💠الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான்
💠التوحيد الربوبية – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல்.
💠التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
💠التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன்.
💠 மலக்குமார்கள்
💠 அல்லாஹ்வின் வேதங்களை நம்புதல் – الايمان بكتب الله
ஒரு முஸ்லீம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒன்று வேதங்களை நம்புதல். வேதங்களை நம்பாமல் மறுத்தால் காஃபிராகி விடுவார்.
💠 அல்லாஹ் பல வேதங்களை பல தூதர்களுக்கு இறக்கியிருக்கிறான்.
குர்ஆனில் வேதங்களை كتب என்றும் صحف என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
مصحف – صحيفة(ج) صحف – பிரதி – தொகுப்பு
தன்zஸீல், ஃபுர்கான் என்றும் நாம் குர்ஆனை கூறுவோம்.
கருத்துரைகள் (Comments)