ஹதீத் பாகம் – 27
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُ هَا الصِّيَامُ وَالصَّلَاةُ
وَالصَّدَقَةُ
ஹுதைபா (ரலி) – ஒரு மனிதனுக்கு சொத்தில் ஏற்படும் சோதனை, தன்னில் தன் பிள்ளைக்கும் அண்டைவீடு என அனைத்து விஷயங்களிலும் ஏற்படும் சோதனைகளுக்கு நோன்பு, தொழுகை, தர்மம் பரிகாரமாக அமைந்து விடும். (முஸ்லீம்)
எதிலெல்லாம் உலக கவர்ச்சி இருக்கிறதோ அதெல்லாம் சோதனை தான்.
قال رسول الله صلى عليه وسلم تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن
أعطي رضي وإن لم يعط لم يرض
அபூஹுரைரா (ரலி) –
தீனாரின் (தங்க நாணயம் அடிமை) நாசமடைந்தான் – تعس عبد الدينار
மேலும் திர்ஹ(த்தின் அடிமை) (வெள்ளி நாணயம்) – والدرهم
கம்பளி மற்றும் போர்வைகள் (அடிமை நாசமடையட்டும்) (இது தூக்கத்தையும் குறிக்கும், ஆடைகளின் ஆசைகளில் எல்லை மீறுவதையும் குறிக்கும்) – والقطيفة والخميصة
கிடைத்தால் திருப்பியாக இருப்பான் – إن أعطي رضي
கிடைக்கவில்லையென்றால் – وإن لم يعط
பொருந்திக்கொள்ளமாட்டான் – لم يرض
✳ பனீ இஸ்ராயீல் 17:26,27
وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا
(26) இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
(27) நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
கருத்துரைகள் (Comments)