ஹதீத் பாகம் – 36
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
عن أبي ذر رضي الله عنه قال خرجت ليلة من الليالي فإذا رسول الله صلى الله
عليه وسلم يمشي وحده وليس معه إنسان قال فظننت أنه يكره أن يمشي معه أحد
قال فجعلت أمشي في ظل القمر فالتفت فرآني فقال من هذا قلت أبو ذر جعلني الله
فداءك قال يا أبا ذر تعاله قال فمشيت معه ساعة فقال إن المكثرين هم المقلون
يوم القيامة إلا من أعطاه الله خيرا فنفح فيه يمينه وشماله وبين يديه ووراءه
وعمل فيه خيرا قال فمشيت معه ساعة فقال لي اجلس ها هنا قال فأجلسني في
قاع حوله حجارة فقال لي اجلس ها هنا حتى أرجع إليك قال فانطلق في الحرة
حتى لا أراه فلبث عني فأطال اللبث ثم إني سمعته وهو مقبل وهو يقول وإن سرق
وإن زنى قال فلما جاء لم أصبر حتى قلت يا نبي الله جعلني الله فداءك من تكلم في
جانب الحرة ما سمعت أحدا يرجع إليك شيئا قال ذلك جبريل عليه السلام عرض
لي في جانب الحرة قال بشر أمتك أنه من مات لا يشرك بالله شيئا دخل الجنة قلت
يا جبريل وإن سرق وإن زنى قال نعم قال قلت وإن سرق وإن زنى قال نعم وإن
شرب الخمر قال النضر أخبرنا شعبة حدثنا حبيب بن أبي ثابت والأعمش وعبد
العزيز بن رفيع حدثنا زيد بن وهب بهذا قال أبو عبد الله حديث أبي صالح عن أبي
الدرداء مرسل لا يصح إنما أردنا للمعرفة والصحيح حديث أبي ذر قيل لأبي عبد
الله حديث عطاء بن يسار عن أبي الدرداء قال مرسل أيضا لا يصح والصحيح
حديث أبي ذر وقال اضربوا على حديث أبي الدرداء هذا إذا مات قال لا إله إلا الله
عند الموت
அபூதர் அல் கிபாரீ (ரலி) – ஒரு இரவில் நான் வெளியே சென்றேன். நபி (ஸல்) தனியாக நடப்பதை நான் கண்டேன் அவர்களுடன் ஒருவரும் இல்லை; என்று நான் நினைத்தேன் நபி (ஸல்) தன்னுடன் யாரும் வருவதை இந்நேரத்தில் விரும்பவில்லையென்று நான் சந்திரனின் நிழலில் நடக்க ஆரம்பித்தேன் நபி (ஸல்) திரும்பியபோது என்னை கண்டார்கள் இது யாரென்று கேட்டார்கள் நான் அபூதர் என்று கூறினேன் மேலும் அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் (என்று கூறினேன்) வாருங்கள் அபூதர்ரே என்று நபி (ஸல்) அழைத்தார்கள் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன் இந்த உலகத்தில் அதிகமாக தேடக்கூடியவர்கள் தான் மறுமையில் குறைவாக அடையக்கூடியவர்கள் யாருக்கெல்லாம் அல்லாஹ் பொருளாதாரத்தை கொடுத்து அதை அவர் வலதிலும் இடதிலும் முன்னாலும் பின்னாலும் தாராளமாக செலவழிக்கிறாரோ அவரைத்தவிர இன்னும் சிறிது நேரம் நபி (ஸல்) உடன் நடந்தேன் நபி (ஸல்) என்னிடம் இங்கே அமருங்கள் என்று கூறினார்கள் கற்கள் சூழ்ந்திருக்கும் சம தரையில் என்னை அமர வைத்தார்கள் நான் திரும்பி வரும் வரை இங்கு அமருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் நான் காண முடியாத அளவிற்கு தூரமாக நபி (ஸல்) சென்றுவிட்டார்கள்
நீண்ட நேரமாக நபி (ஸல்) வரவில்லை நபி (ஸல்) திரும்பி வருகையில் அவர் சொல்லக்கேட்டேன் அவர்கள் கூறினார்கள்.
திருடினாலும் விபச்சாரம் செய்தாலும் அப்போது என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் (என்று கூறினேன்) அந்தப்பகுதியில் நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு எவரும் பதில் சொல்வதை நான் செவியுறவில்லை அது ஜிப்ரஈல் (அலை) அந்தப்பகுதியில் ஜிப்ரஈல் (அலை) வந்தார்கள் அவர் கூறினார் உங்கள் உம்மத்திற்கு ஒரு நற்செயதி சொல்லுங்கள் எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் இந்த உலகத்தில் மரணிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் உண்டு என்று அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தலுமா? என்று நபி (ஸல்) கேட்டபோது ஜிப்ரஈல் (அலை) ஆம் என்றார்கள் திருடினாலும் விபச்சாரம் செய்தலும் என்று நானும் நபி ஸல் விடம் கேட்டேன் அவர்கள் ஆம் என்றார்கள் அவர் சாராயம் குடித்திருந்தாலும் சரியே.
⚜ மற்ற ஹதீஸுகளை ஆய்வு செய்து அறிந்ததில் ஏகத்துவத்தின் உறுதியாக இருந்தவர் தண்டிக்கப்பட்டாலும் பிறகு சொர்க்கம் செல்லுவார்.
கருத்துரைகள் (Comments)