ஹதீத் பாகம் – 37
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) என்னிடம் உஹத் மலையளவுக்கு தங்கம் இருந்தாலும் அதை 3 வது இரவு கழியும் நேரம், அதில் ஒரு தீனாரையும் நான் வைத்துக்கொள்ள மாட்டேன்; கடனுக்காக நான் வைத்திருக்கக்கூடிய பணத்தை தவிர. அந்த சொத்திலிருந்து இப்படி இப்படி இப்படியாக(வலது, இடது, முன்னாலும் பின்னாலும்) தருமம் செய்யும் வரை. இந்த உலகத்தில் அதிகமாக தேடக்கூடியவர்கள் தான் மறுமை நாளில் மிகவும் குறைந்தவர்கள் அதை (இவ்வாறெல்லாம் அல்லாஹ் வின் பாதையில் செலவு செய்யவில்லையெனில்). அப்படிப்பட்டவர்கள் குறைந்தவர்கள் என்று கூறி நடந்தார்கள். நான் வரும் வரை நீங்கள் இங்கேயே உட்காருங்கள் என்று கூறி விட்டு சென்றார்கள். பிறகு அந்த இருட்டில் நபி (ஸல்) நடந்து சென்றார்கள். அவர்கள் என் கண்ணிலிருந்து மறையும் வரை நடந்தார்கள். ஒரு உயர்ந்த சப்தத்தை கேட்டு நபி (ஸல்) ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று பயந்தேன் ஆனாலும் நபி (ஸல்) வர வேண்டாம் என்று கூறியதால் அங்கேயே அமர்ந்தேன். பிறகு நபி (ஸல்) வந்ததும் யா ரசூலுல்லாஹ் ஒரு சப்தத்தை கேட்டு பயந்தேன் என்றதும் அது ஜிப்ரஈல் (அலை) என்றார்கள். அவர் என்னிடம் வந்து கூறினார் யாரெல்லாம் இணை வைக்காமல் உன் சமுதாயத்தில் மரணிக்கிறாரோ அவர் சொர்க்கம் நுழைவார் என்றார் அவர் விபச்சாரம் செய்து திருடினாலுமா என்ற போது ஆம் என்றார்.
💠 நபி (ஸல்) -உங்களிலொருவர் உஹத் மலையளவு தங்கம் தருமம் செய்தாலும் என்னுடைய தோழருடைய ஒரு பிடி அளவு தருமத்திற்கு சமமாகாது
கருத்துரைகள் (Comments)