ஹதீத் பாகம் – 38
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب الغنى غنى النفس வசதி என்பது உள்ளத்தின் செல்வம் தான்
❤ சூரா அல் முஃமினூன் : 23 : 55, 56 & 63
اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ
(55) அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ
(56) அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ
(63) இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
قال ابن عيينة لم يعملوها لا بد من أن يعملوها
இப்னு உயைனா கூறுகிறார் அவர்கள் இன்னும் செய்ய வேண்டிய அமல்கள் இருக்கின்றன என்று அல்லாஹ் இங்கு கூறுவது அவர்கள் செய்யாத சில பாவங்கள் இன்னும் இருக்கின்றன அதை இந்த பொருளாதாரத்தின் மூலம் அவர்கள் செய்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ليس الغنى عن كثرة العرض
ولكن الغنى غنى النفس
அபூஹுரைரா (ரலி) – பொருளாதாரம் என்பது ஒருவனுக்கு நிறைய வசதிகள் இருப்பதல்ல உண்மையில் வசதியென்பது உள்ளத்தின் திருப்தியே.
கருத்துரைகள் (Comments)