ஹதீத் பாகம் – 40
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
6448 حدثنا الحميدي حدثنا سفيان حدثنا الأعمش قال سمعت أبا وائل قال عدنا
خبابا فقال هاجرنا مع النبي صلى الله عليه وسلم نريد وجه الله فوقع أجرنا على
الله فمنا من مضى لم يأخذ من أجره منهم مصعب بن عمير قتل يوم أحد وترك
نمرة فإذا غطينا رأسه بدت رجلاه وإذا غطينا رجليه بدا رأسه فأمرنا النبي صلى
الله عليه وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإذخر ومنا من أينعت
له ثمرته فهو يهدبها
நாங்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடி நபி (ஸல்) உடன் ஹிஜ்ரத் செய்தோம் எங்களுக்கு கூலி தர வேண்டிய கடமை அல்லாஹ் வுக்கு இருந்தது அல்லாஹ் தரக்கூடிய அந்த நன்மையில் எதையும் அனுபவிக்காமல் மரணித்தவர்கள் எங்களில் இருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் தான் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) உஹத் யுத்தத்தின் நாளில் அவர் கொல்லப்பட்டார் ஒரே ஒரு (கோடுகள் வரையப்பட்ட) துணியை மட்டுமே விட்டுச்சென்றார் அந்த துணியால் தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது காலை மூடினால் தலை வெளியே தெரியும் நபி (ஸல்) எங்களுக்கு கட்டளையிட்டார்கள் தலையை மூடிவிடுமாறு கால் பகுதியில் இத்ஹிர்(ஒரு புல் வகை) ஐ வைத்து (மறையுங்கள்) எங்களில் அவரது முயற்சி பலனளித்து அதை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்
⚜ இந்த ஹதீஸின் மூலம் ஜனாஸா முழுமையாக மூடப்பட வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
கருத்துரைகள் (Comments)