ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 49

ஹதீத் பாகம் – 49

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب القصد والمداومة على العمل

நடுநிலையான போக்கும் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்தலும்

⚜ حدثنا عبدان أخبرنا أبي عن شعبة عن أشعث قال سمعت أبي قال سمعت

مسروقا قال سألت عائشة رضي الله عنها أي العمل كان أحب إلى النبي صلى الله

عليه وسلم قالت الدائم قال قلت فأي حين كان يقوم قالت كان يقوم إذا سمع

الصارخ

நான் ஆயிஷா (ரலி) விடம்  நபி (ஸல்) விற்கு மிகவும் விருப்பமான அமல்  எது என்று கேட்டேன் அதற்கு தொடர்ச்சியாக செய்யப்படும் அமல் என பதிலளித்தார்கள். நபி (ஸல்) இரவில் எப்பொழுது எழும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்❓ சப்தமிடும் சேவலின் சப்தத்தை கேட்கும் நேரத்தில் விழிப்பார்கள்.

 حدثنا قتيبة عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أنها قالت كان

أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يدوم عليه صاحبه

ஆயிஷா (ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன் அமல்களில் நபி (ஸல்) விற்கு மிகவும்விருப்பமானது  தொடர்ந்து செய்யக்கூடிய அமல் தான்.