ஹதீத் பாகம் – 50
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
⚜ حدثنا آدم حدثنا ابن أبي ذئب عن سعيد المقبري عن أبي هريرة رضي الله
عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله قالوا ولا
أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة سددوا وقاربوا واغدوا
وروحوا وشيء من الدلجة والقصد القصد تبلغوا
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் – உங்களில் எவரையும் மறுமையில் அவரது அமல்கள் பாதுகாக்கப்போவதில்லை (நபித்தோழர்கள்) உங்களையுமா யா ரசூலுல்லாஹ்? என்று கேட்டார்கள் என்னையும் காப்பாற்றாது என்று நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் தனது அருளைக்கொண்டு என்னை சூழ்ந்து கொண்டாலே தவிற. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குங்கள் காலையிலும் மாலையிலும் இரவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அமல்கள் செய்யுங்கள் நடுநிலையாக சென்றால் நீங்கள் சரியான இடத்தை அடைந்து கொள்வீர்கள்.
கருத்துரைகள் (Comments)