ஹிஸ்னுல் முஸ்லிம் 17

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 17

دعاء دخول الخلاء  கழிவறையில் நுழையும்போது

بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث

என்ற துஆ வில் வரும் பிஸ்மில்லாஹ் ஆதாரமற்றது என கடந்த வகுப்பில் படித்தோம்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال : اللهُمَّ إنّي أعُوذُ بِكَ مِنَ الخُبثِ والخبائِثِ

《☆》 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மலஜலம் கழிக்குமிடத்தில் நுழைந்தால் ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்ற இந்த துஆ வை கூறுவார்கள்(புஹாரி)

குறிப்பு:

《☆》 அனஸ் (ரலி) மூலமாக வரக்கூடிய அறிவிப்புகள் பல இருப்பினும் இமாம் புஹாரி அவர்கள் அதில் சரியானதை தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

إذا دخل الخلاء கழிவறையில் நுழைந்தால்

மொழியடிப்படையில் இதை இருவிதமாக புரிந்துகொள்ளலாம்

ஸூரத்துல் மாயிதா 5:6

اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ

…தொழுகைக்காக நின்றால் ….(தொழுகைக்காக நிற்க விரும்பினால் என்று விளங்க வேண்டும்)

🍁 ஆகவே கழிவறையில் நுழைந்தால் என்று புரிந்துகொள்ளாமல் நுழைய விரும்பினால் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم (كان إذا أراد أن يدخل الخلاء قال : اللهم إني أعوذ بك من الخبث والخبائث) رواه البخاري

கழிவறையில் நுழைய விரும்பினால் (புஹாரி) ↔ كان إذا أراد أن يدخل الخلاء