حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 18
7- دعاء الخروج من الخلاء கழிவறையை விட்டு வெளியேறும்போது துஆ :
غُفْرانَكَ யா அல்லாஹ் உன் மன்னிப்பை வேண்டுகிறேன்
حدثنا محمد بن إسمعيل حدثنا مالك بن إسمعيل عن إسرائيل بن يونس عن يوسف بن أبي بردة عن أبيه عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال غفرانك قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث إسرائيل عن يوسف بن أبي بردة وأبو بردة بن أبي موسى اسمه عامر بن عبد الله بن قيس الأشعري ولا نعرف في هذا الباب إلا حديث عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم
《☆》 ஆயிஷா (ரலி) -நபி (ஸல்) (கழிவறைக்கு செல்லும்) வெட்டவெளியிலிருந்து திரும்பினால் غفرانك என்று கூறுவார்கள் (திர்மிதி, அபூதாவூத்)
குறிப்பு;
《☆》 யாரைப்பற்றியெல்லாம் தகவல்கள் இல்லையோ அவர்களை நம்பகமானவர்கள் என்று கூறும் வழக்கமுள்ளவர்கள் இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் இஜிலி
《☆》 இதில் யூசுஃப் இப்னு அபீபுர்தா என்பவர் இடம்பெறுகிறார் – இவரை இப்னு ஹிப்பான் (ரஹ்) மற்றும் இமாம் இஜிலி நம்பகமானவர் என்கிறார்கள்.
《☆》 இமாம் ஹாக்கிம் தனது முஸ்தத்ரக் என்ற நூலில் பாகம் 1 பக்கம் 261 – யூசுஃப் இப்னு அபீபுர்தா அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) யின் குடும்பத்தில் வந்தவர்களிலேயே மிக நம்பகமானவர்.
சுருக்கம்:
கழிவறையில் நுழையும்போது :
اللهُمَّ إنّي أعُوذُ بِكَ مِنَ الخُبثِ والخبائِثِகழிவறையிலிருந்து வெளியேறும்போது : غفرانك |
கருத்துரைகள் (Comments)