ஹிஸ்னுல் முஸ்லிம் 21B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 21🅱️

15-سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لَا إِلَهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأَتُوبُ إِلَيْكَ

النسائي في عمل اليوم والليلة ص173 وانظر  إرواء الغليل 1/ 135 و2/  94

كَفَّارَةُ الـمَجْلِسِ

《☆》 இந்த துஆ நாம் ஒரு சபையை விட்டு பிரியும்போது ஓதும் துஆ வாகும். ஆனால்

فهذا الحديث رواه النسائي في عمل اليوم والليلة والحاكم في المستدرك، ولفظه: من توضأ فقال: سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كتب في رقٍ ثم طبع بطابع فلم يكسر إلى يوم القيامة

《☆》 அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – யார் உளூ செய்து அதற்கு பின்னால்.

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

என்று கூறுகிறாரோ அவர் மீது அது பதிவு செய்யப்பட்டு முத்திரை குத்தப்பட்டு மறுமை வரை பாதுகாக்கப்படும்.(நஸயீ – சுனனுல் குப்ரா 9829, அமலி யவ்மி வல்லைலா 173)

《☆》 இந்த செய்தியை அறிவிக்கும் அனைவரும் அறிவிப்பாளர் தொடரை அபூஸயீத் (ரலி) உடன் நிறுத்திக்கொள்கின்றனர். ஆகவே இது நபி (ஸல்) விடமிருந்து வந்த செய்தியல்ல. மாறாக இது அபூசயீத் (ரலி) வின் செய்தி தான் எனவே இது மவ்கூஃப் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

《☆》 ஒரே ஒரு அறிவிப்பாளர் இந்த அறிவிப்பை மர்ஃபூஹ்(நபி (ஸல்) விடமிருந்தே அபூ சயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்) என அறிவித்துள்ளார்கள். அவர்கள் நம்பிக்கையான மனன சக்தியுள்ள ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறார்.

ஹதீஸ் கலை விதி :

நபித்தோழர்களால் ஆய்வு செய்து அறிவிக்க முடியாத விஷயங்களை நபித்தோழர்கள் அறிவித்ததாக வந்தாலும் அது நபி (ஸல்) சொன்னதாக அந்த அறிவிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: மறுமையை பற்றி ஏதேனும் ஒரு சம்பவத்தை நபித்தோழர் அறிவித்தால் அது அவரது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாகவும் இருக்கிறது அவர்கள் பொய் சொல்வதிலிருந்தும் தூய்மையானவர்கள் என்ற அடிப்படையில் அது நபி (ஸல்) வின் மூலமாக தெரிந்து கொண்டு தான் அறிவிக்கிறார்கள் என நாம் விளங்கிக்கொள்ளலாம்.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ இந்த அறிவிப்பை ஹஸன் தரத்தில் உள்ளது என்று அறிவிக்கிறார்கள்.

ஷேக் அல்பானி அவர்களும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது அறிவிப்பாளர்களை ஆய்வு செய்தால் இது நபி (ஸல்) வரை செல்லாத, நபித்தோழரோடு நிறுத்தப்பட்ட ஹதீஸாக இருப்பினும் இது சொந்த புத்தியால் சொல்ல முடியாத விஷயமாக இருப்பதால் ஆகவே இது நபி (ஸல்) விடமிருந்து கேட்டு தான் அந்த ஸஹாபி அறிவிக்கிறார்கள் என்று நாம் விளங்கிக்கொள்கிறோம்.