ஹிஸ்னுல் முஸ்லிம் 22

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 22

தலைப்பு – 10

الذكر عند الخروج من المنزل

வீட்டிலிருந்து வெளியேறும்போது ஓதும் துஆ

بسم الله ، توكَّلْتُ على الله ، ولا حَوْلَ ولا قُوةَ إلا بالله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு  ↔ بسم الله

↔ توكَّلْتُ على الله

என்னுடைய சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்திருக்கிறேன்

↔ ولا حَوْلَ ولا قُوةَ إلا بالله

இறைவனைக்கொண்டே அன்றி எனக்கு சக்தியோ பலமோ இல்லை

أبو داود 4/ 325 والترمذي 5/ 490 وانظر صحيح الترمذي3/ 151

قال رسول الله صلى الله عليه و سلم:

وعنْ أنسٍ رضيَ اللَّهُ عنه قال : قال : رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَنْ قَالَ يعنِي إذا خَرَج مِنْ بيْتِهِ : بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ ، يقالُ لهُ هُديتَ وَكُفِيت ووُقِيتَ ، وتنحَّى عنه الشَّيْطَانُ » رواه أبو داودَ والترمذيُّ ، والنِّسائِيُّ وغيرُهمِ

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – எவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறும்போது

بسم الله توكلت على الله، لا حولَ، ولا قوة إلا بالله

என்று கூறுகிறாரே அவரிடம் கூறப்படும் உனக்கு போதுமாக்கப்பட்டுவிட்டது பாதுகாக்கப்பட்டு விட்டாய் மேலும் ஷைத்தான் அவரை விட்டு விலகி விடுவான். (திர்மிதி 3427)

இஸ்ஹாக் அவர்களை தொட்டும் இப்னு ஜுரைஜ் அறிவிக்கிறார் என்று இந்த ஹதீஸில் இடம் பெறுகிறது.

இமாம் புஹாரி அறிவிக்கையில் – இஸ்ஹாக் வழியாக இப்னு ஜுரைஜ் இந்த செய்தியை தவிர வேறு எந்த செய்தியும் அறிவித்ததாக நான் காணவில்லை. இவர் அவரிடம் கேட்டதாக எந்த செய்தியுமில்லை.

《☆》 ஆகவே இந்த செய்தி பலஹீனமானது.