ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3

ஸீரா பாகம் – 3

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) வின் வம்சத்தொடர்

இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள்

1. இஸ்மாயீல் (மூத்தவர்)
2. இஸ்ஹாக் (இளையவர்)

 இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப்.

 யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை).

 அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள்.

 இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் மக்காவிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்கள்.

 அந்த இஸ்மாயீல் (அலை)யின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் தான் நபி முஹம்மத் (ஸல்).

 இப்ராஹீம் (அலை)யும் இஸ்மாயீல்(அலை)யும் கஹ்பாவை கட்டியபோது ஒரு துஆ கேட்கப்பட்டது.

 ஸூரத்துல் பகரா 2:129

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ

اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

   “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”

 இஸ்மாயீல்(அலை)யின் வம்சத்தில் உருவானவர் அதனான் என்பவர் அவரது வம்சத்திலிருந்து வந்தவர் முஹம்மத் (ஸல்).

நபி(ஸல்) வின் பரம்பரை :

محمد، بن عبد الله، بن كلاب، بن مرة، بن كعب، بن لؤي، بن غالب، بن فهر، بن

مالك، بن النضر، بن كنانة، بن خزيمة، بن مدركة، بن إلياس، بن مضر،بن

. نزار، بن معد، بن عدنان

மேற்கூறப்பட்ட வம்சாவழிப் பிரகாரம் நபி(ஸல்) வின் தந்தையின் பெயர்அப்துல்லாஹ் பாட்டனாரின் பெயர் அப்துல் முத்தலிப் முப்பாட்டனாரின் பெயர் ஹாஷிம்.

 அரபுகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிகள் அந்த குறைஷிகளிலேயே சிறந்தவர்கள் ஹாஷிம் குடும்பத்தார்.

 நபி(ஸல்) தாயின் கர்ப்பத்தில் இரண்டு மாதமாக இருந்தபோது நபி(ஸல்) தந்தை தன் 25ஆம் வயதில் மதீனாவில் இறந்தார். தன் தந்தை வியாபாரத்திற்காக சென்றபோது மதீனாவில் இறந்துவிடுகிறார்.

 ஸூரத்துள் ளுஹா 93:6

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

   (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

 நானும் அனாதையாய் வளர்ப்பவனும் சொர்க்கத்தில் இப்படியிருப்போம் என இரு விரல்களை சேர்த்து நபி(ஸல்) கூறினார்கள் (புஹாரி).