ஸீரா பாகம் – 16
உன் நபியை அறிந்துகொள்
❤ நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் :
நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள்.
❤ மிஃராஜ் :
❖ இது எந்த ஆண்டு நடந்தது என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துவேறுபாடு இருக்கிறது. நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு நடந்தது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.
❖ புராக் என்ற வாகனத்தில் நபி(ஸல்) மஸ்ஜிதுல் அஸ்கா விற்கு சென்றார்கள். நபிமார்களுக்கு இமாமாக தொழுதார்கள். பிறகு 7 வது வானத்தில் மூஸா(அலை) யை கண்டார்கள். அல்லாஹ் கடமையாக்கிய 50 நேர தொழுகை மூஸா(அலை) யின் அறிவுரைப்படி நபி(ஸல்) அல்லாஹ்விடம் 5 ஆக குறைத்து கேட்டு அனுமதி பெற்றார்கள். நபி(ஸல்) பல நபிமார்களை வானத்தில் சந்தித்தார்கள். ஜிப்ரயீல்(அலை) சித்ரத்துல் முன்தஹா என்னும் இலந்தை மரம் வரை நபி (ஸல்) உடன் சென்றார்கள். பிறகு நபி (ஸல்) வானத்திற்கு சென்று அல்லாஹ்விடம் 5 வேலைகள் தொழுகையை கடமை என்ற உத்தரவை பெற்று வந்தார்கள்.
❖ நபி (ஸல்) மிஃராஜில் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள் மேலும் பல சம்பவங்களைக் கண்டார்கள்.
கருத்துரைகள் (Comments)