ஹதீஸ் பாகம்-65
ஸஹீஹூல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
⚜ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر
فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر
فليكرم ضيفه
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் மறுமை நாளையும் அல்லாஹ்வையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி மெளனமாக இருக்கட்டும்.மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது அண்டை வீட்டாரை நோவினைப்படுத்த வேண்டாம் மேலும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் தனது விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும்.
⚜ عن أبي شريح الخزاعي قال سمع أذناي ووعاه قلبي النبي صلى الله عليه وسلم يقول الضيافة ثلاثة أيام
جائزته قيل ما جائزته قال يوم وليلة ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله
واليوم الآخر فليقل خيرا أو ليسكت
அபூஷுரைஹ் அல் ஹுஜாயீ (ரலி)- எனது இரண்டு காதுகளும் எனது உள்ளம் அதனை மனனம் செய்தது – நபி (ஸல்) – விருந்தளித்தல் என்பது 3 நாட்களாகும் மேலும் அவர்களுக்குரிய பரிசையும் கொடுத்து விடுங்கள் என்று கூறியபோது பரிசு என்றால் என்ன கேட்டபோது (மேலும்)ஒரு பகல் ஒரு இரவு. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது அமைதியாக இருக்கட்டும்.
கருத்துரைகள் (Comments)