தஃப்ஸீர்
சூரத்து நூர் பாகம் – 5
❀ கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது.
❀ அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும்.
. الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ
❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் 100 கசையடியும் கல்லால் எறிவதும் என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)
❀ அபூஹனீபா, மாலிக் ஷாஃபீ (ரஹ்) கல்லால் எறிந்தால் போதும் மாயிஸ் (ரலி) வை நபி (ஸல்) கல்லால் தான் எரிந்து கொன்றார்கள் கசையடி கொடுக்கவில்லை. (புஹாரி, முஸ்லீம்)
❀ மேற்கூறப்பட்ட உதாரணங்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஹதீஸ்களை புரிந்து கொண்ட விதத்தில் தான் வருகிறது என நாம் அறிந்து கொள்ளலாம்.
கருத்துரைகள் (Comments)