தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 6

 விபச்சாரம் என்றால் என்ன?

சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும்.

لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ

أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486 

والروياني في ” مسنده” (323 / 2 ) رقم (1283

 மஹ்கல் பின் யஸார் (ரலி) – நபி (ஸல்) – ஒரு அந்நிய பெண்ணை நீ தொடுவதை விட உன் தலையில் நீயே ஆணியை வைத்து அடிப்பதே மேலானதாகும். (தபறானீ – 212 – 211 / 20 ) ( இமாம் அல்பானி இதை ஹசன் ஆன ஹதீஸ் என கூறுகிறார்கள்.

 தண்டனை வழங்கும்போது கருணை வர வேண்டாம்.

நபி(ஸல்) – உஸாமா (ரலி) விடம் அல்லாஹ்வுடைய சட்டத்தில் சிபாரிசு செய்ய வந்திருக்கிறாயா? என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் வெட்டுவேன் என நபி(ஸல்) கூறினார்கள்.