தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் 11
மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு சென்றார்கள். இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) வழமையை விட நீண்ட நேரம் உட்கார்ந்தார்கள். நீ தவறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் உன்னை பரிசுத்தப்படுத்துவான் தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேள் – ஆயிஷா(ரலி) கண்ணீர் வற்றிய நிலையில் – ஆயிஷா (ரலி) தாய் தந்தையிடம் நபி (ஸல்) விற்கு பதில் சொல்ல சொன்னார்கள் ஆனால் அவர்கள் சொல்லவில்லை – ஆயிஷா(ரலி) – நான் தவறு செய்தேன் என்று கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்கள்; இல்லை என்று சொன்னால் நம்பப்போவதில்லை அல்லாஹ் என்னை பரிசுத்தமானவள் என்பதை அறிவான் என்று கூறி படுத்தார்கள். நபி (ஸல்) சிரித்துக்கொண்டு வந்தார்கள் – அல்லாஹ் குர்ஆன் வசனங்கள் மூலம் உன்னை பரிசுத்தப்படுத்திவிட்டான். ஆயிஷா(ரலி) வின் தாய் நபி (ஸல்) விடம் செல்லச் சொன்னார்கள். நான் செல்லவில்லை அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினேன். அல்லாஹ் நபி (ஸல்) வின் கனவில் நான் பரிசுத்தமானவள் என காட்டுவான் என எண்ணினேன் ஆனால் குர்ஆன் வசனம் இறங்குவான் என நினைக்கவில்லை.
கருத்துரைகள் (Comments)