தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 74
❤ வசனம் – 36
↔ فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அதில் அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள் ↔ يُسَبِّحُ لَهٗ فِيْهَا
பஜர் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரம் ↔ بِالْغُدُوِّ
மாலையில் அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரையுள்ள நேரம். ↔ وَالْاٰصَالِۙ
🌹நபி (ஸல்)-அல்லாஹ்விற்கு மிக விருப்பமான இடம் மஸ்ஜித் அல்லாஹ்விற்கு மிக வெறுப்பான இடம் கடைத்தெருவாகும்(Shopping)
ومن بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة
🌹நபி (ஸல்) – யாரொருவர் அல்லாஹ்விற்காக பள்ளிவாசலை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்
🌹நபி (ஸல்) – யார் அல்லாஹ்விற்காக ஒரு பறவை தங்க கூடிய அளவில் மஸ்ஜிதை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை காட்டுகிறான்
🌹மறுமையில் அர்ஷின் நிழல் கிடைக்கும் 7 கூட்டத்தில் ஒருவர் பள்ளியோடு உள்ளம் இணைப்பாக இருக்க கூடிய ஒருவர்
🌹நபி (ஸல்) – ஷைத்தான் பாங்கு சொல்லப்பட்டால் விரண்டோடுகிறான்.
கருத்துரைகள் (Comments)