தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 78
தஸ்பீஹ் செய்யுமாறு அல்லாஹ் இடும் கட்டளை
❤ சூரா அல்ஃபுர்கான் 25 : 58
எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
❤ சூரா அல் ஹிஜ்ர் 15 : 98
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
❤ சூரா அல்வாகிஆ 56 : 74
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
❤ சூரா அல் அஃலா 87 : 1
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
💠 இப்னு தைமிய்யா (ரஹ்) – அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வது என்பதன் அர்த்தம்:அல்லாஹ் பூரணமானவன் எந்த குறைகளும் அற்றவன் என்று நாம் உறுதிப்படுத்துவது.
கருத்துரைகள் (Comments)