தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 85
❤ வசனம் : 43
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ
خِلٰلِهٖۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ
مَّنْ يَّشَآءُ ؕ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ
↔ اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து
பிறகு இரண்டு மேகங்களை ஒன்றாக்கினான் ↔ ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ
பிறகு அதை தட்டு தட்டாக ஆக்குகிறான் ↔ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا
அப்பால் அதன் நடுவிலிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர் ↔ فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ
↔ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ
இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான்
↔ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ
தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
❤ வசனம் : 44
يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான் ↔ يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَ
↔ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ
நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)