தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 90
❤ வசனம் : 49
وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ
ஆனால், அவர்களின் பக்கம் – உண்மை (நியாயம்) இருக்குமானால் ↔ وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ
வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள் ↔ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ
💠 குர்ஆன் ஹதீஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அதை பின்பற்றுவார்கள். இல்லையென்றால் கட்டுப்பட மாட்டார்கள்.
💠 இமாம் தபரி (ரஹ்) – பிஷ்ர் என்ற முனாபிக் ஒரு யூதனோடு வியாபாரம் மேற்கொண்டபோது யூதனின் பக்கம் நியாயமிருந்தது. அப்போது யூதன் கூறினான் நபி (ஸல்) விடம் தீர்ப்பு கேட்டு போவோம் என்றான். ஆனால் பிஷ்ர் கூறினான் நாம் கஹப் இப்னு அஷ்ரபிடம் (யூதனிடம்)செல்வோம் என்றான்.
கருத்துரைகள் (Comments)