தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 92

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 92

💠நபி (ஸல்) – கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதை நபி (ஸல்) தடுத்தார்கள்.

💠உமர் (ரலி) – மரணப்படுக்கையில் இருக்கும்போது ஒருவரது ஆடை கணுக்காலுக்கு கீழ் இருந்ததை கண்டு உபதேசம் செய்தார்கள்.

❤ வசனம் : 51

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا

وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

↔ اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால்

 اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ 

அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்

இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள் ↔ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

💠நபி (ஸல்) – ஒரு ஸஹாபி தங்கமோதிரம் அணிந்ததை கண்ட போது நபி (ஸல்) அதை கழட்டி வீசச்சொன்னார்கள். பிற ஸஹாபாக்கள் அந்த மோதிரத்தில் பிற தேவைகளுக்கு பயன்டுத்தலாமே என்று கூறியபோது அவர் அல்லாஹ்வின் தூதர் தூக்கியெறியச்சொன்னதை நான் திருப்பி எடுக்க மாட்டேன் என்றார்கள்.

💠நபி (ஸல்) ஒரு முறை தொழுகையில் செருப்பை கழட்டியபோது ஸஹாபாக்கள் அனைவருமே செருப்புகளை கழட்டினார்கள்.

💠மதுபானம் ஹராம் என்று மதீனாவில் அறிவிக்கப்பட்டபோது வீதிகள் அனைத்தும் மதுவின் ஆறுகளாக ஓடியது

❤ ஸூரத்துர் ரஃது 13:11

اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ

..எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை….

❤ வசனம் : 52

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

↔ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ

யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு

 وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ

அல்லாஹ்வை அஞ்சி மேலும் அவனுக்கு தக்வா வுடன் இருந்து

அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ ↔‏ 

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து

خشى  நடந்து முடிந்ததை நினைத்து பயப்படுவது

تقوى   அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவது