தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 96
💠 முஸ்லீம் சமுதாயத்திற்கு தலைமை தேவை ஆனால் அதை சரியான முறையில் அடைந்து கொள்ள வேண்டும்.
❤ ஸூரத்துல் அஸ்ர் 103:3
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)
ஒரு அமல் ஸாலிஹானதாக இருக்க வேண்டுமென்றால்
- இஹ்லாஸ்(அல்லாஹ்விற்காக செய்யப்பட வேண்டும்)
- متابعة الرسول நபி (ஸல்) வின் வழிகாட்டலின் அடிப்படையில் அமல்களை செய்வது.
💠 இந்த அமலுடன் இபாதத்தும் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்ட அடிமையாக இருக்க வேண்டும்.
إن الله ابتعثنا لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد، ومن ضيق
الدنيا إلى سعة الآخرة، ومن جور الأديان إلى عدل الإسلام
ரூபீஹ் இப்னு அமீர்; ரோம் தலைவரிடம் கூறியது – அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான் , மனிதர்கள் மனிதர்களுக்கு அடிமைப்படுகிற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து இறைவனுக்கு அடிமையாக இருக்கும் நிலைக்கு திரும்புவதற்காக.
💠 அபூஹுரைரா (ரலி) – தங்கம் வெள்ளிக்காசுக்கு அடிமைப்பட்டவனும், பட்டாடைக்கு அடிமைப்பட்டவனும் அழிந்து விட்டார்கள் என சபித்தார்கள் (புஹாரி).
கருத்துரைகள் (Comments)