தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 100

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 100

❤ வசனம் : 59

وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ

اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்

⬇️↔ وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ 

உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்து விட்டால்

⬇️↔ فَلْيَسْتَـاْذِنُوْا 

அவர்கள் அனுமதி கேட்கட்டும்

⬇️↔ كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ 

தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல்

⬇️↔ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ 

இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்

⬇️↔ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

💠 பிள்ளைகளும் பெற்றோரும் ஒரே அறையில் உறங்கும் நிலையிலிருந்தால் பெற்றோர் கவனமாக இருத்தல் அவசியமாக இருக்கிறது