தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 101
❤ வசனம் : 60
وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ
غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
⬇️↔ وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا
விவாகத்தை நாட முடியாத வயோதிக பெண்கள்
⬇️↔ فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ ؕ
தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை
⬇️↔ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ
அவர்கள் அதை பேணுவது அவர்களுக்கு சிறந்ததாகும்
⬇️↔ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்
இந்த சட்டம் யாருக்கு?
- திருமண வாழ்வை அறவே விரும்பாத வயதாகி இருக்க வேண்டும்.
- அவர்கள் பிறரை ஈர்க்கக்கூடிய தோற்றமுள்ளவர்களாக இருக்க கூடாது
💠 சில விரிவுரையாளர்கள் அந்த வயதை அடைந்தவர்கள் முகத்தையும் கையையும் திறப்பதில் குற்றமில்லை என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது என்று இந்த உபதேசங்களை அல்லாஹ் 24:58 இல் ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து கூறுகிறான்
❤ ஸூரத்து தாஹா 20:124
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
கருத்துரைகள் (Comments)