தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 104

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 104

⬇️↔ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا

ஏதேனும் ஒரு வீட்டில் நீங்கள் நுழைந்தால்

⬇️↔ فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ

உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள்

⬇️↔ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ

அல்லாஹ்விடமிருந்து காணிக்கையாக

⬇️↔ مُبٰرَكَةً طَيِّبَةً‌

பரக்கத் நிறைந்த சிறந்த காணிக்கை

💠 உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுதல்

அறிஞ்ர்களின் கருத்துக்கள் :

  • உங்களுடைய சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வதை தான் குறிக்கும்.

مَثَلُ المؤمنين في تَوَادِّهم وتراحُمهم وتعاطُفهم: مثلُ الجسد،

💠 நபி (ஸல்) முஃமின்கள் தங்களுக்கிடையில் அன்பு காட்டுவதிலும் பரிவு காட்டுவதிலும் ஓருடலை போன்றவர்கள்.

  • குடும்பத்தை குறிக்கும் .
  • السلام علينا وعلى عباد الله الصالحين  என்று கூறிவிட்டு செல்லுங்கள் என்று சிலர் கூறுகின்றனர் .

💠 மேற்கூறப்பட்ட 3 கருத்துக்களும் சரியானதே.

💠 நபி (ஸல்) விடம் அமல்களில் சிறந்தது எது என கேட்டபோது ஏழைகளுக்கு உணவளிப்பது, மக்கள் தூங்கும்போது விழித்தெழுந்து இபாதத் செய்வது அறிந்தவர்கள் அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுவது

💠 நபி (ஸல்) – உங்களில் சிறந்தவர் முந்திக்கொண்டு ஸலாம் சொல்பவரே .

💠 நபி (ஸல்) – தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஸலாம் சொல்வது மறுமையின் அடையாளமாகும் .

⬇️↔ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ

நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  

💠 மார்க்கத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் அல்லாஹ் நமக்கு தெளிவு படுத்தி இருக்கிறான் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.