அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 80

إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ : اكْتُبْ ، قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبْ

مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ

🛡 உபாத இப்னு ஸாமித் (ரலி) –  அபூ தாவூத்

إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ

அல்லாஹ் முதலாவதாக எழுதுகோலை படைத்தான்

↔ فَقَالَ لَهُ : اكْتُبْ

அதனிடம் நீ எழுது என்று கட்டளையிட்டான்

قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ

இறைவா நான் என்ன எழுதுவது?

 قَالَ : اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَة

அல்லாஹ் கூறினான். மறுமை நாள் வரை நடக்கவிருக்கும் அனைத்தையும் எழுதி விடு

மற்றொரு அறிவிப்பில்

إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ فَقَالَ لَهُ : اكْتُبْ ، فَقَالَ : يَا رَبِّ ، وَمَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبِ

الْقَدَرَ ، فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ فِي ذَلِكَ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ ،

ثُمَّ رُفِعَ بُخَارُ الْمَاءِ ، فَتَفَتَّقَتْ مِنْهُ السَّمَوَاتُ ، ثُمَّ خَلَقَ النُّونَ ، فَتَحَرَّكَ النُّونُ

فَمَادَتِ الأَرْضُ ، فَأُثْبِتَتْ بِالْجِبَالِ ، فَإِنَّهَا لَتَفْخَرُ عَلَيْهَا

↔ فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ فِي ذَلِكَ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ 

மறுமை நாள் வரை நடக்கவிருக்கும் அனைத்தையும் அந்த எழுதுகோல் எழுதிவிட்டது

என்று இடம் பெற்றுள்ளது.

🛡 விதியைப் பற்றி அதிகமாக ஆய்வு செய்யாமல் இருப்பதே ஒரு முஸ்லிமுக்கு சிறந்தது என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

ஸூரத்துல் கஹ்ஃபு 18:67,68

قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِىَ صَبْرًا‏

(67) (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.

وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا‏

(68) “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!”(என்று கேட்டார்.)

மூஸா (அலை) ஹிழ்ர் (அலை) அவர்களது விஷயத்தில் உள்ள படிப்பினையை விளங்க முயற்சிப்போம்.