அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 85
மறுமையில் அல்லாஹ்விடம் இணைவைத்தவர்கள் பொய் கூறுவார்கள்
💕 ஸூரத்துல் அன்ஆம் 6:23
ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ
“எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
💕 ஸூரத்து யாஸீன்36:65
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
💕 ஸூரத்து ஹாமீம்41:21
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
💕 ஸூரத்துல் முல்க்67:11
(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” يُقَالُ لِلْكَافِرِ يَوْمَ
الْقِيَامَةِ: أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا، أَكُنْتَ تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيُقَالُ
لَهُ: قَدْ سُئِلْتَ أَيْسَرَ مِنْ ذَلِكَ “
அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மறுமை நாளில் காஃபிர்களிடம் அல்லாஹ் கேட்பான் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் தந்தாவது நீ இப்போது நரகத்தை விட்டு வெளியேறியிருக்க கூடாத என்று எண்ணுகிறாயா என்று கேட்பான் அதற்கவர் ஆம் என்றதும் அல்லாஹ் கேட்பான் அதை விட எளிதான ஒன்றையல்லவா நான் உன்னிடம் செய்ய சொன்னேன். (முஸ்லீம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே” என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)
கருத்துரைகள் (Comments)