அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 110
நல்ல விஷயங்களை ஏவுதல் வாஜிப் கெட்ட விஷயங்களை தடுத்தல் வாஜிப் மேலும் அவைகளுடைய ஒழுக்கங்கள்
நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் அகீதாவின் ஒரு பகுதியாகும்
عن أبي سعيد الخدري قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من
رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ،
وذلك أضعف الإيمان . رواه مسلم
அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) -நபி (ஸல்) – உங்களில் யார் ஒரு தீமையை காண்கிறாரோ அதை தன் கையால் (அதிகாரத்தால்)தடுக்கட்டும், அதற்கு அவர் சக்திபெறவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும், அதுவும் அவரால் முடியவில்லையென்றால் உள்ளத்தால் அதை அவர் வெறுக்க வேண்டும் அது தான் அவரது ஈமானின் குறைந்த படித்தரமாகும்
அதிகாரபூர்வமாக ஒரு தீமையை தடுக்க சக்தியிருந்தும் தடுக்கவில்லையென்றால் அவரது கொள்கையில் குறைபாடு இருக்கிறது.
முஹ்தஸிலாக்கள் தான் வரலாற்றில் முதல் முறையாக முஹ்ஜிஸத் என்ற வார்த்தை உபயோகித்ததாக கருதப்படுகிறது.
கருத்துரைகள் (Comments)