அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 116

❤  ஸூரத்துல் மாயிதா 5:105

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ‌ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ

جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.

இந்த வசனத்திற்கு நபி (ஸல்) விடம் விளக்கம் கேட்டபோது:

يَا ثَعْلَبَةُ مُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنْ الْمُنْكَرِ فَإِذَا رَأَيْت شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا،

وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ فَعَلَيْك بِنَفْسِك، وَدَعْ الْعَوَامَّ إنَّ مِنْ،

وَرَائِكُمْ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ لِلْمُتَمَسِّكِ فِيهَا بِمِثْلِ الَّذِي أَنْتُمْ عَلَيْهِ أَجْرُ خَمْسِينَ

مِنْكُمْ

நபி (ஸல்) வடிகட்டிய கஞ்சத்தனம் வரும் காலத்தையும், மனோஇச்சையை பின்பற்றும் சூழலையும்,உலகத்திற்கு பின் மக்கள் செல்லும் காலத்தை நீங்கள் கண்டால் ஒவ்வொருவரும் தன் கருத்தை வைத்து சந்தோஷப்படும் சூழலை நீங்கள் கண்டால் உங்களுடைய விஷயத்தை நீங்கள் முதலில் சரிசெய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு பின்னால் வரக்கூடிய காலத்தில் மிகப்பெரிய இருள் இருக்கிறது அதில் யாரெல்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழுகின்றார்களோ அவர்களுக்கு உங்களில் 50 பேர் செய்யும் கூலி வழங்கப்படும். அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அந்த காலத்து மக்களின் 50 பேரின் கூலியா என்று கேட்டதற்கு இல்லை உங்களில் 50 பேர் அமல் செய்த கூலி என்று நபி (ஸல்) கூறினார்கள் (ஹாகிம்)

❣ சில ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த செய்தியை விமர்சித்தாலும் இது ஹசன் தரத்தில் உள்ள செய்தி என சில அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

❣ நன்மையை ஏவ வேண்டும் தீமையை தடுக்க வேண்டுமென்றாலும் முதலில் நாம் நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் அல்லாஹ் வின் கேள்வியிலிருந்து தப்புவதற்காகவே

❣ நபி (ஸல்) கூறினார்கள் பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர் இன்னொருவரை எப்போதும் உபதேசம் செய்து கொண்டிருந்ததால் கோபமடைந்த அவர் என்னை திருத்தவா அல்லாஹ் உன்னை அனுப்பியிருக்கிறான் என்று கேட்டதும் கோபமடைந்த வணக்கசாலி அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் என்று கூறிவிட்டார். மறுமையில் அல்லாஹ் அந்த வணக்க சாலியிடம் நான் மன்னிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தது யார்? மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்தில் உள்ளது என்று கூறிவிட்டு வணக்கசாலியை நரகத்திற்கு அனுப்பிவிட்டு உபதேசம் செய்யப்பட்டவரை சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

❤  ஸூரத்து தாஹா 20:132

وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَا‌ ؕ لَا نَسْــٴَــلُكَ رِزْقًا‌ ؕ نَحْنُ نَرْزُقُكَ‌ ؕ وَالْعَاقِبَةُ

لِلتَّقْوٰى‏

(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.