கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 10

💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி)

உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள்

  • தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية
  • தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது  حفظ الرعاية

💕 நாம் கற்றதை மனனம் செய்வதை விட அதை நடைமுறை படுத்துவது மிக முக்கியமானதாகும்.

💕 நபி (ஸல்) – குர்ஆனை மனனம் செய்தவர் ஒட்டகத்தை வைத்திருப்பவரைப்போலாவார், ஒட்டகத்தை கட்டிவைத்தால் அது அங்கேயே இருக்கும் அதை அவிழ்த்து விட்டால் போய்விடும்.

💕 கல்வியை மீண்டும் மீண்டும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

💕 இப்னு மசூது (ரலி) – உங்களில் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் அதிகமாயிருப்பினும் மார்க்கத்தை புரிந்து கொண்டவர்கள்(ஃபிக்ஹ்) குறைந்து விட்டார்களே? என்று கேட்டார்கள்.

ஃபிக்ஹ் – குர்ஆன் சுன்னாவிலிருந்து புரிந்து கொள்ளும் விளக்கம்.