ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 08

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 8

فضل العلم بأسماء الله تعالى وصفاته

அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதன் சிறப்பு 

💠 மார்க்கத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையம் பற்றி அறிவதை விட சிறந்த கல்வி இல்லை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான் என்ற நபிமொழியை நாம் அறிந்தோம். மார்க்கத்தை அறிவதே நன்மை என்றால் மார்க்கத்தை அளித்த அல்லாஹ்வை பற்றி அறிவதன் சிறப்பை நாமே உணர முடியும்.

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்) 

 إن دعوة الرسل تدور على ثلاثة أمور 

நபிமார்களின் பிரச்சாரம் 3 அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது.

١ تعريف الرب المدعو إليه بأسمائه وصفاته وأفعاله

மக்களுக்கு அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் அவனுடைய செயல்களைப்பற்றி கற்றுக்கொடுப்பது 

٢ معرفة الطريقة الموصلة إليه وهي ذكره وشكره

அல்லாஹ்வின் பால் நெருங்கக்கூடிய வழிகளை தெளிவு படுத்துவது.

٣ تعريفهم ما لهم بعد الوصول إليه في دار كرامته من النعيم الذي أفضله وأجله رضاه عنهم، وتجليه

لهم ورؤيتهم وجهه الأعلى، وسلامه عليهم، وتكليمه إياهم

💠 நாளை சுவனத்தில் இருக்கக்கூடிய சிறந்த விஷயங்களான அல்லாஹ் மக்களை பொருந்தி கொள்வான் இன்னும் அல்லாஹ் மக்களுக்கு காட்சி தருவான் இன்னும் அல்லாஹ் மக்களுக்கு சலாம் சொல்வான் மேலும் அல்லாஹ் அவர்களிடம் பேசுவான் என்பதையும்  அந்த மக்களுக்கு அவர்களுக்கு உண்டானதைப் பற்றி நபிமார்கள் விளக்குவார்கள்

(நூல்: அஸ்ஸவாஇகுல் முர்சலா, vol 4, 1481 பக்கம்)

💠 நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அல்லாஹ்வை பற்றிய அறிவையும் சரியான முறையில் கற்றுத்தந்தார்கள். அதன் விளைவாக தான் ஸஹாபாக்கள் உச்சகட்டமாக துன்புறுத்தப்பட்ட நிலையிலும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள்.

 قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ ، لَيْلُهَا كَنَهَارِهَا ، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا

كَثِيرًا ، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي ، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَعَلَيْكُمْ

بِالطَّاعَةِ ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا ، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ ، حَيْثُمَا قِيدَ انْقَادَ

நபி (ஸல்) – உங்களை நான் வெள்ளைவெளேறென்ற ஒரு வழியில் விட்டுச்செல்கிறேன், அதில் இரவும்  பகலைப்போன்று தான் இருக்கும், எனக்கு பிறகு அழிவை நோக்கிச்செல்லக்கூடியவன் அதிலிருந்து தடம் புரளுவான்.

(அஹமத், இப்னு மாஜா)

💠 ஆகவே நபி (ஸல்) தெளிவாக அல்லாஹ் வை பற்றி தெளிவு படுத்திட்டு தான் சென்றார்கள்.

 مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلاَّ كَانَ حَقًّا عَلَيْهِ أَنْ يَدُلَّ أُمَّتَهُ عَلَى خَيْرِ مَا يَعْلَمُهُ لَهُمْ، وَيَنْهَاهُمْ عَنْ شَرِّ مَا يَعْلَمُهُ لَهُمْ

நபி (ஸல்) – அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு தூதராக இருந்தாலும் அவர்கள் நன்மை என்று அறிந்து கொண்ட எந்தஒன்றையும் அவர்களுடைய சமுதாயத்திற்கு சொல்லாமல் செல்லவில்லை. தீமை என்று அவர்கள் அறிந்த அனைத்தையும் விட்டு அவர்களுடைய சமுதாயத்தை தடுத்திருக்கிறார்கள்.

(முஸ்லீம்)

💠 ஆகவே இவையனைத்தையும் சொல்லித்தந்த நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி நமக்கு சொல்லி தந்திருக்க மாட்டார்களா?