ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 09

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 9

🌷 مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُ مِنَ النَّارِ إِلا وَقَدْ بُيِّنَ لَكُمْ 

நபி (ஸல்) – உங்களை சுவர்க்கத்தின் பால் நெருக்கக்கூடிய மேலும்  நரகத்திலிருந்து தூரமாக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் விடப்படவில்லை 

(முஹ்ஜமுல் கபீர் – இமாம் தபரணீ)

🌷 அல்லாஹ்வை பற்றிய அறிவில் தான் மனிதனின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ்வை அறிந்தால் மட்டுமே இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஸூரத்துந் நஹ்ல் 16:97

مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا

يَعْمَلُوْنَ‏ 

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

ஸூரத்துல் அன்ஆம் 6:82

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏ 

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.