ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)
பாகம் – 10
⚜ ஒரு ஆத்மாவிற்கு அவனை படைத்தவனை அறிந்து கொள்வதும், நேசிப்பதும், அவனை திக்ர் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் தான் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஒரு அடியான் அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொண்டால் அவன் அல்லாஹ்வை சரியாக அறிந்தவனாகவும் அவனை அதிகமாக தேடக்கூடியவனாகவும் அவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான்.
⚜ அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமலிருந்தால் அல்லாஹ்வை அறியாதவனாக இருப்பான், அல்லாஹ்வை வெறுப்பானவனாகவும் அவனை விட்டும் தூரமானவனாகவும் இருப்பான்.
⚜ ஓர் அடியான் அல்லாஹ்வை எந்த இடத்தில் வைக்கிறானோ அவ்விடத்தில் தான் அல்லாஹ் அவனை வைக்கிறான்.
(அல் காஃபிய்யது ஷாபியா, பக்கம் 3,4- இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்சிய்யா ரஹ்)
⚜ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي
بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ
مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي
أَتَيْتُهُ هَرْوَلَةً
كتاب التوحيذ
الصحيح البخاري
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.
சூரா ஃபாத்திர் 35:28
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம்.
விளக்கம்: அல்லாஹ்வை சரியான முறையில் அறிந்து கொண்ட உலமாக்கள் தான் அவனை சரியான முறையில் அஞ்சுவர். மகத்துவமிக்க, அறிவு நிறைந்த பூரணமான அனைத்து பண்புகளையும் கொண்ட, உயர்ந்த அழகிய திருநாமங்களை கொண்ட அல்லாஹ்வை ஒருவன் அறியும்போது அவன் அல்லாஹ்வை அஞ்சுவதும் பூரணமாக இருக்கும்.
(தப்சீர் இப்னு கஸீர், vol 3, பக்கம் 559)
ஈஸா (அலை) அல்லாஹ்விடம்
ஸூரத்துல் மாயிதா 5:118
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).
இந்த வசனத்தை ஓதிவிட்டு நபி (ஸல்) அழுதார்கள்.
⚜ ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனுடைய உள்ளமும் ஆன்மாவும் வாழ்வதில் தான் தங்கியிருக்கிறது. அவனுடைய உள்ளம் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் அதை படைத்தவனைப்பற்றி அது அறிந்திருக்க வேண்டும்.(அல் ஜவாபுல் காஃபீ, இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா)
⚜ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
அபூமூஸா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வை நினைவு கூறுபவனுக்கும் நினைவு கூறாதவனுக்கும் உள்ள வித்தியாசம் உயிரோடிருப்பவனுக்கும் மரணித்தவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப்போன்றது.(புஹாரி)
கருத்துரைகள் (Comments)