ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 12

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 12

அல்லாஹ்வின் திருநாமங்களை சரியான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் புரிந்து; அதை உள்ளத்தில் பதிந்து, அது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். (இமாம் ஸஅதீ, மஜ்மூஹ் அல் காமிலா)

ஸூரத்துல் அன்ஃபால் 8 : 2

அல்லாஹ்வை அறிந்து கொள்வதென்பது 2 வகைப்படும் 

  • அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வது 

படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்ற அறிவு உலகில் அனைத்து மதத்தினரிடமும் பரவலாகவே காணப்படுகிறது.

  • அல்லாஹ்வை நேசிக்க வேண்டும், அவனை பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்தில் வர வேண்டும் அவனுக்கு பயப்பட வேண்டும் அவன் பால் நெருங்க வேண்டும், அவனிடம் வெட்கப்பட வேண்டும், அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டும் என்ற எண்ணம்  ஏற்படுத்துகிற அறிவு. இவ்வாறு அல்லாஹ்வை அறிந்துகொள்வது தான் நன்மைகள் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது.

குர்ஆனில் அல்லாஹ்வை பற்றி அதிகமாக கூறப்பட்டிருக்கிறது 

உதாரணம் 

ஸூரத்துல் முஜாதலா 58:1

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ۖ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ‏ 

(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.