சுன்னத்தான தொழுகைகள் 03

சுன்னதான தொழுகைகள்

பாகம் – 3

சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம்: 

❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் )

❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை)

கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம் 

سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத் 

(ரவாதிப் سنن رواتب )

سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத் 

(السنن غير الرواتب)

வலியுறுத்தப்பட்ட சுன்னத் ↔سَنَةٌ المُؤَكَّدَةُ

உம்மு ஹபீபா (ரலி) -நபி (ஸல்) – யார் ஒருவர் ஒரு இரவிலும் பகலிலும் (சுன்னத்தான )12 ரக்காத் தொழுகிறாரோ  அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். 

  • லுஹருக்கு முன்னால் 4 பின்னால் 2,
  • மஃரிபிற்கு பின் 2,
  • இஷாக்கு பிறகு 2,
  • ஃபஜ்ருக்கு முன்னால் 2.

நபி (ஸல்) விடமிருந்து இதை கேட்ட நாள் முதல் இதை நான் விட்டதே இல்லை (சுனன் திர்மிதி- ஹசன் ஸஹீஹ், ஸஹீஹ் முஸ்லீம்).