வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 01

ஃபிக்ஹ் 

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

பாகம் – 1

அலி (ரலி) – நபி (ஸல்) – குர்ஆன் உடையவர்களே நீங்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒற்றைப்படையான வித்ர் தொழுகையை விரும்புகிறான். (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி – ஹசன் என்ற தரத்தில் குறிப்பிடுகிறார்கள்)

நபி (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பிரயாணத்தில் விடாமல் தொழுத இரண்டு சுன்னத்துகள் சுபுஹுடைய முந்திய 2 ரக்காஅத் மேலும் வித்ர் தொழுகையாகும்