ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 24

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 24

الخالِق என்ற பெயரின் மற்றொரு வடிவம் தான் الخلاق. 

الخالِق என்ற பெயர் அல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.

உதாரணம் :-

ஸூரத்துல் ஹஷ்ர் 59:24

هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

ஸூரத்துஜ்ஜுமர் 39:62

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.

خَالِقُ என்ற பெயரின் முபாலகா(அதிகமாக என்ற கருத்தை தரக்கூடிய வடிவம்) குர்ஆனில் 2 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது 

ஸூரத்துல் ஹிஜ்ர் 15:86

اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏

ஸூரத்து யாஸீன் 36:81

…. بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏

அல்லாஹ் الخالِق என்று தன்னை கூறும்போது அந்த பெயரில் خَلْق என்ற صفة (பண்பு) இருப்பது நாம் அறிகிறோம்.