ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 28
2. மனிதர்களையும் ஜின்களையும் அல்லாஹ் படைத்தது அவனை வணங்குவதற்காகவே.
ஸூரத்துத் தாரியாத் 51:56
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
⭐ அல்லாஹ் மனிதர்களை படைத்ததும் தன்னை வணங்குவதற்காகவே
⭐ அல்லாஹ் தன்னை படைப்பாளன் என்று நமக்கு கற்றுத்தருவதும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான் என்று நாம் புரிந்து கொண்டு அவனை வணங்குவதற்காகவே.
⭐ இந்த அடிப்படையை புரியாதவர்கள் மட்டுமே அல்லாஹ் தான் படைப்பாளன் என்று கூறிவிட்டு அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவார்கள்.
ஸூரத்து யூஸுஃப் 12:106
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ
மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
⭐ இப்னு அப்பாஸ் (ரலி) – அவர்களிடம் வானங்கள் பூமியை மலைகளை படைத்தது யாரென்று கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் ஷிர்க் வைப்பவர்களாக இருப்பார்கள்.
ஸூரத்துல் அன்கபூத் 29:61, 63
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُوْلُنَّ اللّٰهُۚ فَاَنّٰى يُؤْفَكُوْنَ
மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.
ஸூரத்துல் முஃமினூன் 23:84 – 89
قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
سَيَقُوْلُوْنَ لِلّٰهِؕ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ
“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.
سَيَقُوْلُوْنَ لِلّٰهِؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
قُلْ مَنْۢ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
سَيَقُوْلُوْنَ لِلّٰهِؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ
அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
ஸூரத்துந் நம்லி 27:59, 60
ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ
….. அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”
اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
⭐ ஈஸா (அலை) அவர்களையும், சிலைகளையும், பசுமாட்டையும், அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தும் அவன் படைத்தவையே. படைப்புக்களை வணங்காமல் படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். முஸ்லிம்களாயினும் முஸ்லீம் அல்லாதவர்களாயினும் இணைவைப்பது படைத்தவன் ஒருவன் மட்டுமே என்ற கொள்கை உள்ளத்தில் ஆழமாக பதியாததால் தான்.
ஸூரத்துல் ஹஜ் 22:73
يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
⭐ அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாதவர்கள் மட்டுமே அவனை தவிர பிறருக்கு வணக்கங்களை செலுத்தி இபாதத்துகள் செய்வார்கள்.
⭐ வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்பது தான் லா இலாஹ இல்லல்லாஹ் வின் அர்த்தம். ஆகவே அந்த வணக்கத்தை வேறொருவருக்கு செலுத்தினாலும் அல்லாஹ் அதை ஒருபோதும் அங்கீகரிக்கவே மாட்டான்.
ஸூரத்துன்னிஸாவு 4:48
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
⭐ பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கிறான்.
ஸூரத்துஜ்ஜுமர் 39:53
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
⭐ அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் ஒருவன் மரணித்தால் அல்லாஹ் நாடினால் அவனை மன்னிப்பான் அல்லாஹ் நாடினால் தண்டிப்பான். ஆனால் இணைவைத்து தவ்பா செய்யாமல் மரணித்தால், அவன் நிரந்தரமாக நரகத்தில் இருக்க வேண்டிய நிலை வரும்
أَلَّا تُشْرِكَ بِاللَّهِ شَيْئًا ، وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ ⭐
அபூதர்தா (ரலி) – நபி (ஸல்) அறிவுறை கூறுகையில் ..”நீ நெருப்பில் எறியப்பட்டாலும் துண்டு துண்டாக அறுக்கப்பட்டாலும் அல்லாஹ்விற்கு இணைவைத்து விடாதே”என்று கூறினார்கள்.
⭐ ஆகவே அல்லாஹ்வின் திருநாமங்களில்
الخالق படைப்பவன்
الخلاق அதிகமாக படைப்பவன்
மிக முக்கியமான திருநாமங்களாக கருதப்படுகிறது.
அல்லாஹ் எதையும் வீணாக படைக்கவில்லை
எதையும் சரியான முறையில் அவற்றை அறிந்து அவனை கண்ணியப்படுத்தவேண்டிய முறைப்படி அவனை நாம் கண்ணியப்படுத்த வேண்டும்.
கருத்துரைகள் (Comments)