ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 35

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 35

2. رزق خاص  விசேஷமான ரிஸ்க்  رزق القلوب (உள்ளங்களுக்கு  கிடைக்கும் ரிஸ்க்). உள்ளத்திற்கு நல்ல கல்வியும் ஈமானும் கிடைப்பதே رزق خاص ஆகும். மேலும் மார்க்கத்தை சீரான முறையில் வைத்துக்கொள்வதற்கேற்ப ஹலாலான ரிஸ்க் கிடைப்பது.

இது முஃமின்களுக்கு மட்டுமே அவர்களது படித்தரங்களுக்கு ஏற்ப கிடைப்பதாகும்

ஸூரத்துத் தலாஃக் 65:11

…..وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا‏

…. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் – அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்

ஸூரத்து ஸாத் 38:49 – 54

هٰذَا ذِكْرٌ‌ؕ وَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ‏

இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.

جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ‌ۚ‏

“அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.

مُتَّكِـــِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ‏

அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.. 

وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ‏

அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ‏

“கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

 اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّـفَادٍ ‌ۖ 

“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

ஆகவே இந்த 2 வகை ரிஸ்க்கையும் வழங்குபவன் அல்லாஹ் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

உலக இன்பத்திற்கான ரிஸ்க்கிற்காக உலகம் அலைகிறது ஆனால் உள்ளத்திற்கான ரிஸ்க் விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கிறார்கள்.