ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 37
வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று
وحدت الوجود அனைத்தும் அல்லாஹ் தான் எனும் கருத்து
⭐ இயல்வது யாவும் இறை உருவே
⭐ அனைத்தும் அல்லாஹ்வின் தோற்றமே
ஸூரத்துல் ஹதீத் 57:3
هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
⭐ இந்த வசனத்தில் الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு வெளிப்படை என்ற அர்த்தமிருப்பதால், அல்லாஹ்வின் வெளிப்பாடு தான் பிரபஞ்சத்தின் அனைத்தும் என்ற கருத்தை இட்டுக்கட்டி மக்களை வழிகெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
⭐ அல்லாஹ் எங்குமிருப்பான், தூணிலுமிருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றெல்லாம் கூறுவது மிகவும் தவறான வழிகேடான கொள்கையாகும். இவ்வாறான கொள்கை ஒரு மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியே கொண்டு சென்றுவிடும்.
⭐ الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு நபி (ஸல்) கற்றுத்தந்த விளக்கத்தில் அல்லாஹ் உயர்ந்தவன் அவனுக்கு மேலாக வேறெதுவும் கிடையாது என்று கூறினார்கள்.
கருத்துரைகள் (Comments)